எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முயற்சி: டி.ஆர்.பாலுஎண்ணூர் காமராஜர் துறைமுகத்தைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சி செய்வதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அமைந்துள்ள, மத்திய அரசுக்கு சொந்தமான பெரிய துறைமுகங்களில் ஒன்றான எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை விற்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
2001-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், முதல்வராக இருந்த கருணாநிதி முன்னிலையில் நாட்டுக்கு இந்தத் துறைமுகம் அர்ப்பணிக்கப்பட்டது. இந்தத் துறைமுகத்தின் எதிர்கால வளர்ச்சித் தேவைகளைக் கருத்தில் கண்டு அண்மையில் மத்திய அரசு மேலும் 1,000 ஏக்கர் நிலத்தை துறைமுகத்துக்கு வழங்கியது.
இன்றைய நிலவரப்படி, துறைமுகத்தின் வசம் உள்ள ஏறத்தாழ 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும்.
முதல் கட்ட வளர்ச்சி முழுவதுமாக முடிவடையாத நிலையிலேயே இந்தத் துறைமுகம் அசுர வளர்ச்சி பெற்று, குறுகிய காலத்தில் ரூ.480 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
மேலும், சென்ற 8 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு 40 சதவீதம் ஈவுத் தொகையை வழங்கியுள்ளது. மத்திய அரசுக்குச் சொந்தமான 12 துறைமுகங்களில், மத்திய அரசுக்கு ஈவுத்தொகை தரும் ஒரே துறைமுகம் காமராஜர் துறைமுகம் மட்டுமே.
காமராஜரின் பெயருக்கும் புகழுக்கும் அடையாளமாக தனிச்சிறப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தைத் தனியாருக்கு விற்கும் எந்த முயற்சியையும் தமிழகம் ஒரு நாளும் ஏற்காது என்பதை மத்திய, மாநில அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.