அரசுக்கு சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிப்பு.


சென்னை கே.கே.நகரில் அரசுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வீட்டு வசதிவாரிய பெண் அதிகாரி உள்பட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை கேகே நகர் கோட்ட வீட்டு வசதிவாரிய செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புகார் மனு அளித்தார். அதில், கே.கே நகரில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான மனைகள், அரசு விதிமுறைகளை மீறி, போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததை அடுத்து மோசடியில் தொடர்புடைய கண்காணிப்பாளர் ரவி, மார்க்கெட்டிங் மேலாளர் நிறைமதி, அலுவலக உதவியாளர் சுகுமார், சர்வேயர் செந்தில்குமார் ஆகிய 4 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் போலியான ஆவணம் மூலம் பதிவு செய்த பத்திரங்கள் அனைத்தும் பத்திரப்பதிவு துறையால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த மோசடியில் ஈடுபட்ட நிறைமதி, சுகுமார், செந்தில்குமார், ரவி மற்றும் அவர்களுக்கு உடந்தையாகச் செயல்பட்ட ஆனந்த முருகன், முருகன் ஆகிய 6 பேர் மீது போலீஸார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.