ஈரான் நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி; 42 பேர் காயம்.


ஈரான் நாடாளுமன்றத்தில் நுழைந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியான நிலையில், 42 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள நாடாளுமன்றத்திற்குள் கைத்துப்பாக்கியுடன் நுழைந்த தீவிரவாதிகள் 3 பேர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள், அங்கு அலுவலகப் பணியில் ஈடுபட்டிருந்த சில ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்ததாக கூறப்படுகிறது.
அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்ட நிலையில், தெஹ்ரானின் தெற்கு பகுதியில் உள்ள முன்னாள் மதகுரு இமாம் கோமெய்னியின் ((Imam khomeini)) கல்லறை அமைந்துள்ள பகுதியிலும் 4 தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு, தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாதி ஒருவன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் தலைநகரில், ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.