சவுதி அரேபியா மீது ஈரான் உளவுத்துறை அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு.


ஈரான் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு சவுதி அரேபியாதான் பொறுப்பு என்று ஈரான் உளவுத்துறை அமைச்சர் மஹ்முத் அலாவி குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரானில் கடந்த 7ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் அயதுல்லா கொமேனியின் நினைவிடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 தீவிரவாதிகள் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஈரான் உளவுத்துறை அமைச்சர் மஹ்முத் அலாவி , தாக்குதல் தொடர்பாக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்தத் தாக்குதலின் பின்னணியில் சவுதி அரேபியா இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அலாவி தெரிவித்துள்ளார்.
சன்னி பிரிவு முஸ்லிம்கள் வசிக்கும் சவுதி அரேபியா, ஷியா முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஈரானை எப்போதும் எதிரியாகத்தான் பார்க்கிறது என்றும் அலாவி கூறியுள்ளார்.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.