பெரிய தொகையிலான தனிநபர் கடன் பெற்றவர்கள் யார்? – பட்டியல் தயாரிக்கிறது வருமான வரித்துறை.


கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி-சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையான வைப்புத்தொகை மற்றும் பெருந்தொகை கடனாகப் பெற்ற தனிநபர்கள் பட்டியலை வருமான வரித்துறையினர் திரட்டி வருகின்றனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கணக்கில் காட்டப்படாத பணத்தை சட்டத்திற்குப் புறம்பாக புதிய தாள்களாக மாற்றிக்கொள்ள சில வங்கி அதிகாரிகள் உதவியிருப்பதாகவும், முறையான விசாரணை இன்றி தனி நபர் கடன்களாக பெருந்தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சில கூட்டுறவு வங்கிகள் கமிஷன் தொகை பெற்றுக்கொண்டு பழைய நோட்டுக்களை புதிய தாள்களாக மாற்றிக்கொடுத்ததாகவும் நிலையான வைப்புத்தொகைக்கான காசோலை பின் தேதியிட்டு கொடுக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது போன்ற தகவல்களை வருமான வரித்துறையினர் திரட்டி வருகின்றனர். பட்டியல் தயாரானவுடன் சம்மந்தப்பட்ட நபர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.