17 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!


சிறைத்துறை ஏடிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக சிபிசிஐடி காவல்துறைத் தலைவராக ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்கே நகர் தேர்தலுக்காக தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட சாரங்கன், தென்சென்னை கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறைத்துறை ஏடிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக ஜாங்கிட்டும், மாநில மனித உரிமை ஆணைய கூடுதல் ஏடிஜிபியாக காந்திராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் சங்கர் அமலாக்கப்பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய ஏடிஜிபியாக விஜயகுமாரும், போக்குவரத்து திட்டமிடல் பிரிவு ஏடிஜிபியாக அம்ரேஷ் புகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு புகார்களில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த ஜாபர்சேட், தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.