ஹாலிவுட் திரைப்படங்கள் திருடப்படுவதைத் தடுக்க புதிய அமைப்பு தொடக்கம்.


ஹாலிவுட் திரைப்படங்கள் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியாவதைத் தடுக்கும் வகையில் HBO, Netflix, உள்ளிட்ட 30 ஹாலிவுட் நிறுவனங்கள் இணைந்து ((ACE)) ”ஏஸ்” என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளன.
திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளின் கரு திருடப்படாமல் பாதுகாக்கவும், திருடப்பட்டால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் வழிகாட்டும் வகையில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 540 கோடி திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் திருட்டுத்தனமாக இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்டிருப்பதாக ”ஏஸ்” தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு திரைப்படங்கள் இணையதளத்தில் வெளியாவதைத் தடுக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட சில அமைப்புகள் வெற்றிகரமாக செயல்படாத காரணத்தாலேயே ((ACE)) ”ஏஸ்” தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் பிபிசி, சோனி, வால்ட் டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ் போன்ற பிரபல நிறுவனங்களும் பங்குதாரர்களாக சேந்துள்ளன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.