பயண நேரத்தை பாதியாக குறைக்கும் புதிய வகை விமானங்கள்.


தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானங்களை விட அதி வேகமாகச் செல்லும் பயணிகள் விமானத்தை இன்னும் ஆறு ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு கொண்டுவர இருப்பதாக புதிய விமானத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் பூம் என்ற புதிய விமானத்தயாரிப்பு நிறுவனம் தங்களின் விமானங்களின் திறன்கள் குறித்து விளக்கியது. இந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய வகை விமானங்கள் மூலம் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு இரண்டரை மணி நேரத்தில் சென்று விட முடியும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானங்கள் மூலம் நியுயார்க்கில் இருந்து லண்டனை அடைய ஆறு மணி நேரம் இருபது நிமிடங்கள் ஆகும்.
இதே போல் சான்ஃபிரான்சிஸ்கோ – டோக்கியோ இடையேயான பயணதூரத்தை 11 மணி நேரத்தில் இருந்து ஐந்தரை மணிநேரமாகவும் லாஸ் ஏஞ்செல்ஸ் – சிட்னி இடையேயான 15 மணி நேர பயணதூரத்தை 7 மணி நேரமாகவும் குறைத்துவிட முடியும் என்றும் பூம் நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் விமானங்களை பெற 5 விமான சேவை நிறுவனங்கள் பதிவு செய்திருப்பதாகவும் பூம் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.