டார்ஜிலிங்கில் வலுக்கும் கூர்க்காலாந்து கோஷம்: மத்திய ரிசர்வ் படை வீரர் குத்திக் கொலை பலர் காயம்.


மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடைபெற்ற கூர்க்கா இன மக்கள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் ரிசர்வ் காவல்படை அதிகாரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி டார்ஜிலிங்கில் காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இதையடுத்து பதற்றம் நிறைந்த பகுதிகளில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். முழு அடைப்பின் போது அரசு அலுவலகங்களை குறிவைத்து கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுடன், ஆங்காங்கே திரண்டு அரசு வாகனங்கள், மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
இதனால் ராணுவத்திற்கும் அவர்களுக்கு இடயே மோதல் ஏற்பட்டது. கயாபாரி பகுதியில் ஏற்பட்ட கலவரத்தின் போது கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கலவரத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
சிங்மரி என்ற பகுதியில் வாகனத்திற்கு தீ வைக்க முயன்றதை தடுத்த ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த கிரான் தமாங் என்பவர் கத்தியால் கழுத்தில் குத்தப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வன்முறையின் போது கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.