ஜி.எஸ்.டி. அறிமுக நிகழ்ச்சியை புறக்கணிக்கிறார் மம்தா பானர்ஜி.


ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜி.எஸ்.டி அறிமுக நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் இதை வெளியிட்டுள்ள அவர், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு வர்த்தகர்களுக்கும் குறைந்தது 6 மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அப்போதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இல்லையெனில் பெரிய பொருளாதார நாட்டில் ஏற்படும் குழப்பங்களுக்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார். தெளிவின்மை, மோசமான நிர்வாகம் காரணமாக மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பல இடங்களில் உயர்ந்திருப்பதாக அவர் சுட்டிக்காடியுள்ளார். ஜி.எஸ்.டி. அறிமுக நிகழ்ச்சியில் புறக்கணிப்பதாக திரிணாமூல் காங்கிரசின் நாடாளுமன்றக் குழுவும் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.