ஜி.எஸ்.எல்.வி-மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.


ஜி.சாட்-19 செயற்கைக் கோளை சுமந்து சென்ற, அதிக எடைகொண்ட, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சீறிப்பாய்ந்த இந்த ராக்கெட் ஜி.சாட்-19 செயற்கைக் கோளை வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தியது.
இஸ்ரோ உள்நாட்டிலேயே மிகப்பெரிய ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டைத் தயாரித்துள்ளது. இது கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. சுமார் 4 டன்கள் கொண்ட செயற்கைக் கோளை இந்த சக்திவாய்ந்த ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் சுமந்து விண்ணில் சென்று வெற்றிகரமாக செயற்கைக் கோளை விண்ணில் நிலை நிறுத்தியது.
முன்னதாக குறைவான எடை கொண்ட செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமும் 2 முதல் இரண்டரை டன்கள் எடைகொண்ட செயற்கைக் கோள்களை ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் செலுத்தி வந்தது. இதை விட அதிக எடை கொண்ட செயற்கைக் கோளை பிரஞ்ச் கயானாவிலிருந்து ஏரியன் வகை ராக்கெட்டுகள் மூலம் அனுப்பி வந்தது.
இந்த நிலையை மாற்ற அதிக எடைகொண்ட ராக்கெட்டை இந்தியாவிலேயே தயாரித்து வெற்றி கண்டது, அதன் விளைவே இந்த ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டாகும், இது 640 டன் எடை கொண்டது. 43 மீ உயரம் கொண்டது, சுருக்கமாக கூற வேண்டுமெனில் 200 யானைகளின் எடைக்குச் சமமானது. இது 8 டன்கள் எடையை சுமந்து செல்லகூடிய திறன் கொண்டது.
இந்த வகை அதிதிறன் ராக்கெட் தன் முதல் பயணத்தை ஜி.சாட்-19 செயற்கைக் கோளுடன் மேற்கொண்டது. இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் நவீன வசதிகளுடன் கூடிய டிரான்ஸ்பாண்டர்களைக் கொண்டது. இது பூமிக்குப் படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை சீரமைத்தல், சாலைப் போக்குவரத்தை ஒழுங்கு செய்தல், நிலம், புவி தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.
இதன் மூலம் பவர் ராக்கெட்டை விண்ணுக்குச் செலுத்தும் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் ஆகியவற்றுடன் இந்தியாவும் இணைந்துள்ளது.
பிரதமர் இந்த வெற்றிகரமான முயற்சிக்காக ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானிகளை பாராட்டியுள்ளார்.
இன்றைய தினம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று ஐஎஸ்ஆர்ஓ சேர்மன் ஏ.எஸ். கிரண் குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.