கால்பந்து உலகக்கோப்பை போட்டி முன்னேற்பாடுகளில் பாதிப்பில்லை என கத்தார் விளக்கம்.


உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் பாதிப்பின்றி நடைபெற்று வருவதாக கத்தார் தெரிவித்துள்ளது. 2022-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் கத்தாரில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதாகக் கூறி சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகள் கத்தாருடனான தூதரக உறவுகளை துண்டித்துள்ள விவகாரத்தை அடுத்து உலகக் கோப்பை போட்டிகள் அங்கு நடைபெறுமா என்று கேள்வி எழுந்தது.
இந்நிலையில் அங்கு உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளும் கட்டுமானப் பணிகளும் தொய்வின்றி நடைபெற்று வருவதாக விளையாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுகளுக்கிடையேயான விவகாரங்கள் வழக்கமானவை என்றும் தாங்கள் தங்கள் பணியை வழக்கம் போல் செய்துவருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.