ஜிஎஸ்டி வரி முறையால், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை உயரும்.


ஜிஎஸ்டி வரி முறையால், கட்டி முடிக்கப்படும் தறுவாயில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை உயரும் என கூறப்படுகிறது. அதே சமயம் ஜூலை 1-க்குப் பிறகு வீடு வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு விலை குறைய வாய்ப்புள்ளது.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குபவர்கள், பகுதி பகுதியாக பில்டருக்கு பணம் அளிப்பதாக இருந்தால், இதுவரை சேவை வரியாக 4.5 சதவீதம் செலுத்தியிருப்பார்கள். ஆனால், ஜூலை 1ஆம் தேதிக்குப் பிறகு, செலுத்தும் தொகைக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கும்.
ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கியிருக்கிறார் என்றும், அந்த பணத்தை கட்டிடம் எழும்ப எழும்ப பகுதி பகுதியாகச் செலுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த வகையில் இதுவரை 20 லட்சம் ரூபாய் செலுத்தியிருப்பார் என்றால் அதற்கு 4.5 சதவீத சேவை வரி விதிக்கப்பட்டிருக்கும். மீதமுள்ள 80 லட்சத்தை ஜூலை 1ஆம் தேதிக்குப் பிறகு செலுத்தினால், 12 சதவீதத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கும். ஜூலை 1-க்கு முன்னர், சேவை வரி 4.5 சதவீதம் என்ற அடிப்படையில் 80 லட்சத்திற்கு 3.6 லட்சம் ரூபாய் என்றால், ஜூலை 1ஆம் தேதிக்குப் பிறகு 12 சதவீதம் என்ற அடிப்படையில் 9.6 லட்ச ரூபாயாக உயரும்.
இதேபோல, ஜூலை 1 காலகட்டத்தில் முடிவடைந்துள்ள அல்லது கட்டி முடிக்கும் தறுவாயில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை விலைக்கு வாங்குவதாக இருந்தால், மொத்த தொகைக்கும் 12 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கும்.
ஜிஎஸ்டி முறை அமலுக்கு வந்த பிறகு, வீடு கட்டுவதற்கான சிமெண்ட், உருக்கு மற்றும் பல்வேறு சேவைகளுக்கு ஏற்கெனவே வரி செலுத்தப்பட்டிருக்கும் என்பதால், வீட்டை விற்கும்போது, ஏற்கெனவே உள்ளீட்டுப் பொருட்களுக்கு செலுத்திய வரியை கழித்துக் கொள்ளலாம்.
ஜூலை 1ஆம் தேதிக்கு முன்னர் செலுத்தப்பட்ட வரிக்கு இந்த முறை பொருந்தாது என்பதால், ஜூலை ஒன்றாம் தேதிக்குப் பின் கட்டி முடித்துள்ள அல்லது முடியும் தறுவாயில் உள்ள வீடுகளுக்கு மொத்த தொகைக்கும் 12 சதவீத ஜிஎஸ்டி வரி தவிர்க்க இயலாதது என பில்டர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், ஜிஎஸ்டி முறையால், ஜூலை 1-க்குப் பிறகு வீடு வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு விலை குறைய வாய்ப்புள்ளது. பில்டர்கள் வீடு கட்டுவதற்கான உள்ளீட்டுப் பொருட்களுக்கு செலுத்திய வரியை கேட்டுப்பெற முடியும். இதை சுட்டிக்காட்டி அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குபவர்கள் பேரம் பேசி விலையைக் குறைத்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாக ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.