பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஆலையின் ஒரு பகுதி தரைமட்டம்.


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இன்று காலை பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஆலையின் ஒரு பகுதி தரைமட்டமானது. பேரநாயக்கன் பட்டியில் கிரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
இங்கு தரைச் சக்கரம் தயாரிக்கும் பிரிவில் கடந்த சனிக்கிழமை பணி முடித்த தொழிலாளர்கள் மருந்தை சுத்தம் செய்யாமல் விட்டுச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வானிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக இந்த வெடிமருந்தில் தீப்பற்றி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் அந்த அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. காலை நேரத்தில் தொழிலாளர்கள் பணிக்கு வராததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. விபத்து குறித்து ஆலை நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.