கத்தாரில் இருந்து இந்தியர்களை திருப்பி அழைத்து வர நடவடிக்கை.


கத்தாரில் இருந்து இந்தியர்களை திருப்பி அழைத்து வர நாளை முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதாக கத்தாருடனான உறவுகளை சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் விலக்கிக் கொண்டன. இதனால் அங்குள்ள இந்தியர்கள் பல்வேறு நடைமுறை பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர சிறப்பு விமானங்களை இயக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன் படி நாளையும் நாளை மறுநாளும் தோஹா – மும்பை மார்க்கத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் இயக்கப்படவுள்ளன. வரும் 25-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 8-ஆம் தேதி வரை திருவனந்தபுரம் – தோஹா, தோஹா – கொச்சி, தோஹா – திருவனந்தபுரம் மார்க்கங்களில் ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.