இணையதள தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தயாரான கூகுள், யூடியூப்.


இணையதள தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத கருத்துகளை பரப்புவோருக்கு எதிரான போரை முன்னெடுக்கவும், அவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடவும் பிரபல இணையவழி தேடுபொறியான கூகுள் நிறுவனமும், அதன் துணை அமைப்பான Youtubeம் இணைந்து முடிவு செய்திருக்கின்றன.
தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் என பல்வேறு முகங்களில் இயங்கும் சமூக விரோதிகள் தங்களுக்குள் ரகசிய சங்கேத குறியீடுகளுடன் கூடிய தகவல்களை பகிர்ந்துகொள்ளவும், வதந்திகளை பரப்பிட பயன்படுத்தும் தளமாகவும், தங்கள் அமைப்பை பற்றி புகழ்பாடி கொள்ளும் இடமாகவும் இணையதளம் விளங்கி வருகிறது…
அண்மையில் லண்டன் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மூவரில் ஒருவர், யூடியூப் தளத்தை பயன்படுத்தி வீடியோக்களை பகிர்ந்து கொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதேபோல், பயங்கரவாத கருத்துகளை பரப்பும் மூலமாக, கூகுளை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பயங்கரவாத கருத்துகளை பரப்பும் வீடியோக்களையும், அதற்கு ஆதரவான விளம்பரங்களையும் கண்டறிந்து களையெடுக்க யூடியூப் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதேபோன்று, பயங்கரவாத கருத்துகள், அவதூறான செய்திகளை முற்றாக நீக்கிடவும், சம்பந்தப்பட்டவர்களை பிளாக் செய்திடவும் கூகுள் நிறுவனம் உறுதிபட முடிவெடுத்திருக்கிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.