சென்னையில் விரைவில் மின்சாரப் பேருந்து -எம்.ஆர்.விஜயபாஸ்கர்.


சென்னையில் மின்சாரப் பேருந்துப் போக்குவரத்தை கொண்டு வரும் நடவடிக்கையாக அசோக் லேலண்ட்,
டாடா நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று அசோக் லேலண்டு நிறுவனம் சார்பில் மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.
31 பேர் பயணம் செய்யும் வகையிலான மின்சாரப் பேருந்துகளை 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் தூரம் வரை ஓடும் என்று கூறப்படுகிறது. சோதனை ஓட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர், மாநகரப்போக்குவரத்துக் கழக அதிகாரிகள், அசோக் லேலண்டு நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இன்றைய சோதனை ஓட்டம் நல்ல முறையில் அமைந்ததாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விரைவில் டாடா நிறுவனத்தின் பேருந்தும் சோதிக்கப்பட இருப்பதாக அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து இரு நிறுவனங்களின் பேருந்துகள் தொடர்பான தொழில் நுட்ப ஆய்வுகளுக்குப் பிறகு விரைவில் சென்னையில் மின்சாரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இன்று சோதிக்கப்பட்ட பேருந்தின் சக்கரங்கள் ஹிமாச்சலப் பிரதேச மாநில சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை சாலைக்கேற்ப மாற்றியமைக்க அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இன்று சோதனை ஓட்டம் செய்யப்பட்ட பேருந்து குளிர்சாதன வசதி இல்லாத பேருந்து என்றும், குளிர்சாதனப் பேருந்துகளை சென்னையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது சென்னையில் ஓடும் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக புதிதாக 2 ஆயிரம் பேருந்துகளுக்கு ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் விஜய பாஸ்கர் மேலும் 2 ஆயிரம் பேருந்துகளுக்கு முதலமைச்சர் அனுமதி அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.