நரசிம்மராவ் போல் அமைதியாக இருந்தால் எடப்பாடி பழனிசாமி விளைவுகளை சந்திக்க நேரிடும் – தினகரன்தரப்பு.


டி.டி.வி தினகரன் கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க எம்.பி., அரி வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றி வேல், நரசிம்மராவ் போல் அமைதியாக இருந்தால் எடப்பாடி பழனிசாமி விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
இன்று காலை திருத்தணியில் செய்தியாளர்களிடம் பேசிய அரக்கோணம் அ.தி.மு.க எம்.பி., கோ.அரி, அ.தி.மு.க கட்சியும், ஆட்சியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் டி.டி.வி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கோ.அரிக்கு பதில் அளிக்கும் வகையில் சென்னையில் செய்தியாளர்களிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் பேசினார். அப்போது சசிகலாவை பொதுச் செயலாளராக ஆதரித்த கோ.அரிக்கு திடீரென ஞானோதயம் வந்தது எப்படி என்று வினவினார்.
ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி என்றும் கட்சிக்கு சசிகலா என்றும் தாங்கள் கூறி வரும் நிலையில், கோ.அரி போன்றவர்களை பேசவிட்டு, எடப்பாடி பழனிசாமி நரசிம்மராவ் போல் அமைதியாக இருக்க கூடாது என்று வெற்றிவேல் வலியுறுத்தினார்.
கோ.அரி போன்று தான்தோன்றித்தனமாக பேசுபவர்களை முதலமைச்சர் தடுக்கவில்லை என்றால் அரியை எப்படி கிள்ளி எரிவது என்று தங்களுக்கு தெரியும் என்றும் வெற்றிவேல் எச்சரித்துள்ளார்.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மூலமாக சசிகலாவிடம் ஆதரவு கேட்டதால் தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்ததாகவும் வெற்றிவேல் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.