போதைப் பொருள் கடத்தினால் குண்டர் சட்டம் உறுதி.


போதைப்பொருள் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் ஏகே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
சர்வதேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பேரணியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவல்துறை ஆணையர் தொடங்கி வைத்தார். அதில், 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். போதை பொருட்கள் எதிர்ப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் மாணவ- மாணவிகள் ஏந்தியிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் ஏகே விஸ்வநாதன், போதைப்பொருள் கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.