சேலம், நெய்வேலி மற்றும் ஓசூருக்கு விமான சேவை.


சேலம், நெய்வேலி மற்றும் ஓசூர் நகரங்களில் விமான சேவை தொடங்கும் வகையில் மத்திய அரசுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது தொடர்பான தமிழக அரசு செய்திக்குறிப்பில் மண்டலங்களுக்குள் விமானப் போக்குவரத்து இணைப்புத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் – தமிழக அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்தை எளிமையாக்கி குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களுக்கும் சேவை அளிப்பதே இதன் நோக்கம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சிறிய நகரங்களில் விமானச் சேவைகள் தொடங்கப்படுவதன் மூலம் உட்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி அடையும் என்றும், தொழில் மற்றும் வர்த்தம் பெருகி வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஓசூர், சேலம், நெய்வேலியில் விமானச் சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.