தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படத்தின் கதை என்ன?


நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் இந்த வாரத் தொடக்கத்தில் பெல்ஜியம் புறப்பட்டார். அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஹாலிவுட் திரைப்படமான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகீர்’(The Extraordinary Journey of the Fakir)  ஷுட்டிங் பெல்ஜியத்தில் ஒரு மாதம் நடைபெறும், அதற்காகத்தான் தனுஷ் பெல்ஜியம் சென்றார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஞாயிறு அன்று விஐபி 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்சிக்குப் பிறகு தனுஷ் பெல்ஜியத்துப் புறப்பட்டார். ஆகஸ்ட் முதல் வாரம் வரையிலான படப்பிடிப்பை முடித்த பிறகு தான் வீடு திரும்புவார்.

ப்ரெஞ்சு நாவலான 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபாகிர் ஹூ காட் டிராப்ட் இன் அன் ஐகியா கபோர்ட்’ என்ற' நாவலை தழுவி உருவாகி வரும் இந்த ஹாலிவுட் திரைப்படத்தில் நடிப்பதில் பெருமை கொள்வதாக தனுஷ் கூறியுள்ளார். இப்படத்தின் கதை தலைப்பைப் போலவே சுவாரஸ்யமானது.

அஜா ஒரு மேஜிக் நிபுணன். இந்தியாவில் அவனுக்கு கிடைத்ததெல்லாம் வறுமைதான். அவனுடைய அம்மா அவனை ஒரு ரகசிய நோக்கத்துக்காக பாரிஸ் நகரத்தில் இருக்கும் ஈஃபில் டவருக்கு அனுப்புகிறார். டாக்ஸி ட்ரைவர் ஒருவனுடன் ஏற்படும் திடீர் சண்டையால் அஜா, பாரிஸின் பிரம்மாண்டமான ஃபர்னிச்சர் கடையில் உள்ள ஒரு அலமாரிக்குள் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொள்கிறான்.

அந்த அலமாரி விற்பனையாகி உடனடியாக ஏற்றுமதி செய்யப்பட்டு ஐரோப்பாவை சுற்றி வருகிறது. இந்தப் பயணத்தில் பலவிதமான மனிதர்களை சந்திக்கிறான் அஜா. வாழ்க்கைப் பற்றிய புரிதல் அவனுக்கு விரிவடைகிறது. தான் கற்ற வித்தையான மேஜிக்கின் மீது நம்பிக்கை வைத்து வீடு திரும்புகிறானா அவனுக்கு பாரீஸில் என்ன ஆகிறது என்பது தான் இப்படத்தின் கதை.

தனுஷுடன் இணைந்து 'தி ஆர்டிஸ்ட்' திரைப்பட நாயகி பெர்னிஸ் பெஜோ, உமா துர்மான் மற்றும் அலெக்ஸஸாட்ரா தாத்ரியோ உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். கனடா இயக்குனர் கேன் ஸ்காட் இயக்குகிறார். இசையமைப்பாளர் நிகோலஸ் எரெரா தவிர அமித் திரிவேதி இரண்டு இந்திப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மே மாதம் மும்பையில் முடிந்தது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.