குட்கா உரிமையாளரிடம் சுகாதாரத்துறை அமைச்சர் லஞ்சம் பெற்றதாக தி.மு.கவினர் சட்டப்பேரவையில் அமளி.


குட்கா உரிமையாளர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் 56 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததாக கூறி, சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு செய்துள்ளது.
சென்னை செங்குன்றம் பகுதியில் செயல்பட்டு வந்த குட்கா நிறுவனம் ஒன்றில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது கிடைத்த டைரி ஒன்றில், சுகாதாரத்துறை அமைச்சர், அப்போதைய காவல் துறை ஆணையர்கள், உயர் அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மாதம் தோறும் லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் சிக்கின.
இந்த ஆதாரத்தின் அடிப்படையில், வருமான வரித்துறையின் சென்னை பிராந்திய முதன்மை இயக்குனர் பாலகிருஷ்ணன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அந்த கடிதத்தில், சுகாதாரத்துறை அமைச்சருக்கு மாதத்திற்கு 14 லட்சம் ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கு 56 லட்சம் ரூபாய் குட்கா நிறுவனத்தில் இருந்து லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களில் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவருக்கு மாதம் 15 லட்சம் ரூபாய் வீதம் 60 லட்சம் ரூபாய் குட்கா நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
இதே போன்று சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், காவல் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் சிக்கியுள்ளதால் அதன் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தனது கடிதத்தில் வருமான வரித்துறையின் சென்னை பிராந்தி கூடுதல் இயக்குனர் பாலகிருஷ்ணன், அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன ராவை கேட்டுக் கொண்டிருந்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.