RKநகர் பணப்பட்டுவாடா விவகாரத்தால் சட்டப்பேரவையில் அமளி -திமுகவினர் வெளிநடப்பு.


ஆர்கே நகர் பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட தி.மு.க. உறுப்பினர்கள், அதுகுறித்த முதலமைச்சரின் பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறி வெளிநடப்புச் செய்தனர்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் குறித்து விவாதிக்க அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்த பேரவைத் தலைவர் தனபால், தகவல் கோரல் முறையில் முதலமைச்சர் பதிலளிப்பார் என்றும் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர், அமைச்சர்கள் குறித்து மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆர்.கே.நகர் விவகாரம் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் கொடுத்த தகவல் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
ஆனால் முதல்வர் பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறி தி.மு.க.வினர் வெளிநடப்புச் செய்தனர்.
தி.மு.க. உறுப்பினர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.