காங்கிரஸில் கோஷ்டி பூசல், சத்தியமூர்த்தி பவனில் கைகலப்பு.


சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால், வித்தியாசம் பாராமல் ஆண்களும், பெண்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். 
சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, மகிளா காங்கிரஸ் தேசிய ஜெயலாளர் ஹசீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம், அதற்கான தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் நிறைவடைந்ததும், திருநாவுக்கரசர் தனது அறைக்கு சென்றுவிட்டார். அப்போது ஹசீனா தனது கோரிக்கைளை திருநாவுக்கரசரிடம் அளிப்பதற்காக அவரது அறைக்கு சென்றார். இதே நேரத்தில் ஜான்சிராணியும் தனது கோரிக்கைகளை எடுத்துரைக்க திருநாவுக்கரசர் அறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. கோரிக்கைகளை அளிப்பதற்காக திருநாவுக்கரசர் அறை வாசலில் காத்திருந்த போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. இதனைத்தொடர்ந்து இரு கோஷ்டிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. சத்தத்தை கேட்டு அறையில் இருந்து வெளியே வந்த திருநாவுக்கரசர் கைகலப்பில் ஈடுபட்டுவர்களை சமரசம் செய்து வைத்தார். பின்னர் பேசிய அவர், ’தவறு செய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்தார். 

ஹசீனா- ஜான்சிராணி இடையே தனது ஆதரவாளர்களுக்கு பதவி வழங்குவது, ஃப்ளக்ஸ் பேனர்கள் வைப்பது உள்பட பல பிரச்சனைகள் நிலவி வந்த நிலையில், காங்கிரஸ் மாநில தலைமையகத்தில் இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.