தொழிலாளி உயிரிழப்பு: சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணி நிறுத்தம்.


தியாகராய நகர் சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணியின் போது ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் அருகில் வணிக வளாகங்கள் இருந்ததால், ஜா கட்டர் இயந்திரம் மூலம் இடிப்புப் பணிகள் நடந்து வந்தன. இந்தநிலையில், கட்டட இடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் ஜா கட்டர் இயந்திர வாகனத்தின் ஓட்டுனர் சரத் உயிரிழந்தார். உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த மே 31ல் தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தை அணுக முடியாத காரணத்தால் 2 நாட்களுக்கு மேலாக தீயை அணைக்க முடியவில்லை. தீ அணைந்த பின்னர் சேதமடைந்த கட்டடத்தின் இடிப்புப் பணி துவங்கியது. தற்போது தொழிலாளர் உயிரிழப்பைத் தொடர்ந்து சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.