சென்னையில் காலாவதியான பொருட்கள், மறுதேதியிட்டு மீண்டும் விற்பனை செய்வதாக புகார்.


சென்னையில் உள்ள பல்பொருள் அங்காடி மற்றும் இனிப்பகங்கள் உள்பட 240 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை நோட்டீஸ் வழங்கி எச்சரித்துள்ளது.
பல்பொருள் அங்காடிகளின் தானிய வகை பாக்கெட்டுகளில் ஒட்டப்படும் காலாவதியாகும் தேதிக்கான ஸ்டிக்கர்கள், தேதி நெருங்கும்போது, மாற்றி ஒட்டப்பட்டு, செயற்கையாக கால நீட்டிப்பு செய்யப்பட்டு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலகத்துக்கு வாட்ஸ் ஆப் மற்றும் மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் குவிந்தன. இதையடுத்து, நீல்கிரீஸ், ஸ்பென்சர்ஸ், பிக் பஜார், மோர், ரிலையன்ஸ், ஹெரிடேஜ், கிரேஸ் உள்ளிட்ட சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு நேரில் சென்ற உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவற்றுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளித்தனர்.
இதேபோல், இனிப்பகங்களான அடையாறு ஆனந்தபவன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உள்ளிட்ட பல கடைகள், சந்தைகளில் உள்ள சிறுவணிகக் கடைகள் என சென்னையில் மட்டும் 240 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சட்டம் 2011-ன்படி, உணவு பாக்கெட்டுகளின் மேல் ஒட்டப்படும் பார்கோடுடன், விலை மற்றும் எடை மட்டுமே விற்கும் நிறுவனத்தால் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
அப்பொருளின் காலாவதியாகும் தேதியை பாக்கெட்டின் வெளிப்பகுதியில் ஸ்டிக்கர் போன்ற எளிதில் கிழித்து மாற்றிக் கொள்ளும் தன்மையுள்ளவற்றின் மூலம் குறிப்பிடக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. எனவே, இந்த சட்ட விதிகளைப் பின்பற்றி, காலாவதியாகும் தேதியை, பாக்கெட்டுகளுக்குள் வெளிப்படையாகத் தெரியும் வகையில் துண்டுச் சீட்டுகள் வைத்தோ, பாக்கெட்டின் வெளிப்பகுதியில் முத்திரையாக அச்சிட்டோ விற்பனை செய்யுமாறு கடைகளுக்கு அந்த நோட்டீசில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 15 நாட்கள் அவகாசம் வழங்கிய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சட்டத்தை மீறுபவர்கள் மீது ஜூலை 1-ம் தேதி முதல் ஆய்வு மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.