சென்னை விமான நிலையத்தில் பத்து கோடி ரூபாய் மதிப்பிலான கெட்டமைன் போதைப் பொருள்.


சென்னையிலிருந்து விமானம் மூலம் அபுதாபிக்கு கடத்த முயன்ற 10 கோடி ரூபாய் மதிப்பிலான கெட்டமைன் போதைப் போதைப்பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
அபுதாபி செல்லும் விமானம் மூலம் கெட்டமைன் என்ற போதைப் பொருளைக் கடத்த முயற்சிப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் செல்ல இருக்கும் பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளில் தீவிர சோதனை நடத்திய அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பயணி ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
மேலும் அவரிடம் சோதனையிட்டதில் 10 கிலோ கெட்டமைன் போதைப் பொருளை மறைத்து வைத்திருப்பதை கண்டறிந்தனர். பின்னர் நடைபெற்ற விசாரணையில் ஆப்ரிக்காவை சேர்ந்த அந்த நபர் பெயரில் ஜோகன் பாணி என்பதும், ஏற்கண்வே பலமுறை போதைபொருள் கடத்தலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கெட்டமைனை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஜோகன் பாணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.