சென்னையில் கூலிக்கு செல்ஃபோன் திருடும் கும்பல் கைது.


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூலிக்கு செல்போன் திருடும் கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளன.
ஆந்திராவில் இருந்து திருடர்களை அழைத்து வந்து செல்போன் திருட வைக்கும் சென்னை நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியிடம் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
பிடிபட்டவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் ஆந்திராவிலிருந்து தங்களை அழைத்து வந்து கோயம்போடு உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் திருட்டில் ஈடுபட வைப்பதாக கூறியுள்ளனர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உறங்குபவர்கள், இரவில் தனியாக நடந்து செல்பவர்களை குறி வைத்து செல்போன்களை தாங்கள் திருடி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். திருடிக் கொடுக்கும் ஒரு செல்போனுக்கு அந்த சென்னை நபர் தலா 500 ரூபாய் பணம் கொடுப்பதாகவும், ஒரு நாளைக்கு ஒரு நபர் 5 செல்போன்களாவது திருடிக் கொடுக்க வேண்டும் என்று தங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் தாங்கள் திருடிக் கொடுக்கும் செல்போன்களை அந்த நபர் ஆந்திராவில் 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்துவிடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.