குழாய் மூலம் மணலிக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்.


சென்னை துறைமுகத்தில் இருந்து குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி CPCL நிறுவனத்திற்கு நேரடியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் வகையில், பூமிக்கு அடியில் 17 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணி கடந்த 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கச்சா எண்ணெய் பூமிக்கு அடியில் கொண்டு செல்வதால், தங்கள் பகுதியில் தீவிபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், கச்சா எண்ணெய் கடலில் கலந்தால் மீனவர்களின் வாழ்வாதரப் பாதிக்கப்படும் எனக் கூறி எண்ணூர் பகுதி மக்கள் பலகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி, தண்டையார்பேட்டை சாலையில் 500க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.