கட்டுமான பணிகளுக்கு மணலை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் திட்டம் – எடப்பாடி பழனிசாமி.


கட்டுமான பணிகளுக்கு மணலை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் தமிழ்நாடு மணல் இணைய சேவை மற்றும் செல்ஃபோன் செயலியை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
தனியாரிடம் இருந்த மணல் குவாரிகளை கடந்த மாதம் முதல் தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. மணல் விற்பனையை முறைப்படுத்த ஆன்லைன் மூலம் பதிவு செய்து மணல் விற்பனை மேற்கொள்வது குறித்தும் தமிழக அரசு பரிசீலித்து வந்தது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மணல் இணைய சேவையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.
www.tnsand.in என்ற இணையதளமுகவரியில் மணல் தேவைக்கு பதிவு செய்துகொள்ள முடியும்.

அதே போன்று மணல் விற்பனை தொடர்பான tnsand என்ற செல்ஃபோன் செயலியையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இணைய சேவை மற்றும் செல்ஃபோன் செயலி தொடர்பான கையேட்டையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
இதன் படி தண்ணீர் லாரிகளுக்கு முன் பதிவு செய்வது போன்று மணலுக்கும் பொதுமக்களும், லாரி உரிமையாளர்களும் குவாரிகளில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதன் மூலம் நீண்ட வரிசையில் லாரிகளி காத்திருக்க நேராமல் குறிப்பிட்ட நேரத்துக்கு சென்று மணலைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் விருப்பமான குவாரிகளையும் தேர்வு செய்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. tnsand செல்போன் செயலி மற்றும் இணையதள பக்கம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.