மாட்டிறைச்சி மற்றும் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிவிப்புகள் முழு விவரம்:


சந்தைகளில் கால்நடைகள் சந்தைப்படுத்துதலை முறைப்படுத்தும் விதிகள் - 2017 குறித்த உரை.

தமிழ்நாட்டில் பசு வதை தடுப்பு கடந்த 40 ஆண்டுகளாக அமலில் உள்ளது என்பதை இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது, சந்தைகளில் கால்நடைகள் சந்தைப்படுத்துதலை முறைப்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றம் துறையின் மூலம், கடந்த 23.5.2017 அன்று, 1960 ஆம் ஆண்டைய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ், கால்நடைகள் சந்தைப்படுத்துதல் விதிகள், 2017 வெளியிடப்பட்டது. இவ்விதிகள் மாட்டினங்களான பசு, எருது, எருமை, கன்றுகள் மற்றும் ஒட்டகம் ஆகியவற்றிற்குப் பொருந்தும்.

இவ்விதிகளின் 22(b)(ii), 22(d)(ii) மற்றும் 22(e) பிரிவுகளின் படி, சந்தைகளில் விற்கப்படும் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விதிகளின் பிரிவு 22(d)(iv) ன்படி, மாடுகளை வாங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விதிகளின் 8வது பிரிவின் படி மாநில எல்லைகளுக்கு 25 கிலோ மீட்டர் தொலைவிற்குள் மாட்டுச் சந்தைகள் செயல்படக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விதிகளின் பிரிவு 22(e)(iii)ன் படி, மாட்டினைக் கொள்முதல் செய்தவர், அதனை மதம் சார்ந்த நிகழ்வுகளுக்காக பலியிடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய விதிகளை  செயல்படுத்தத் தடை ஆணை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் கடந்த 23.5.2017 அன்று மனுக்கள் (W.P.No.10128/2017 மற்றும் 10127/2017) தாக்கல் செய்யப்பட்டு, உயர்நீதிமன்ற அமர்வு, இவ்விதிகள் செயல்படுத்துவதற்கு நான்கு வாரத்திற்கு இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. இந்த விதிகளுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த திரு.அப்துல் பகீம் குரேஷி என்பவர் வழக்கு பதிவு செய்துள்ளார். இவ்வழக்கு வரும் 11.7.2017 அன்று விசாரணைக்கு வரவுள்ளது.

மேலும், மத்திய அரசுக்கு; இந்த விதிகளால் விவசாயிகள் பலவிதங்களில் பாதிக்கப்படுவார்கள் என்பதையும், விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் எண்ணம் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக மாண்புமிகு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்  திரு. ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளதாக பல பத்திரிக்கைகளில் செய்தி வெளிவந்துள்ளது. உச்சநீதி மன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும், இது குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளது.

தீர்ப்பிற்குப்பின் உரிய நிலைப்பாட்டினை இவ்வரசு எடுக்கும் எனவும் பெரும்பான்மையான மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசு செயல்படும் என்பதையும் இம்மாமன்றத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி  எண் 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை ...

பள்ளிக் கல்வித் துறை:
சமுதாயத்தின் விளிம்பில் உள்ள ஏழை எளிய மக்கள், பொருளாதார வளர்ச்சி பெற்று, ஏனையோருக்கு இணையாக உயர்வடைய வேண்டும் என்றால் அவர்கள் கல்வி வளர்ச்சி பெற வேண்டும். மாநிலம் முழுவதும் சிறந்த கல்வி அளிக்கப்பட்டால் தான் பொருளாதார வளர்ச்சி, அடித்தட்டு மக்களுக்கும் சென்றடையும். எனவே தான் கல்விக்கும் அதன் வளர்ச்சிக்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தார்கள்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.