திருட்டுத்தனமாக நடைபெறும் பைக் மற்றும் கார் ரேஸ் – களையெடுக்க களமிறங்கியது போலீஸ்.


சென்னையின் முக்கிய சாலைகளில், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களையும், சட்டவிரோதமாக பந்தயத்தில் ஈடுபடுவோரையும் மடக்கிப்பிடிக்க நூறு இடங்களில் பெருநகர காவல்துறையினர் அதிரடி வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னை பெருநகரின் வார இறுதிநாட்களில், பகல் இரவு பாராது, மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வலம் வரும் சில கல்லூரி மாணவர்கள், வளரிளம் இளைஞர்கள், காவல்துறையினரின் கடும் எச்சரிக்கையையும் மீறுவதோடு மட்டுமின்றி, பெற்றோர் தங்கள் மீது வைத்திருக்கும் எதிர்கால கனவுகளையும் புறந்தள்ளிவிட்டு அதிவேக பந்தயத்தில் ஈடுபடுகின்றனர்.
தங்களின் அற்ப சந்தோஷத்திற்காக, தான்தோன்றித்தனமாக நடைபெறும் இந்த நிகழ்வுகளின் போது, அதிவேகமாக பாய்ந்து வரும் வாகனங்கள் மோதி, சாலையோரம் செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும், படுகாயமடைவதோடு, சில தருணங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், சென்னை பெருநகரில் அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்களை கண்டறிந்து களையெடுக்க, மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், கலங்கரை விளக்கம், கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம் CPT சந்திப்பு, சாஸ்திரி நகர், ஐசிஎஃப் உட்பட சென்னையின் நூறு இடங்களில், சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி, காவல்துறையினர் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.
மோட்டார் சைக்கிள்களிலும், கார்களிலும் அதிவேகமாக வருவோரை மடக்கிப்பிடிக்கும் போலீசார், வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கின்றனர்.வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த அதிரடிச் சோதனை, இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
4 மணி நேரத்திற்கு ஒருமுறை இடத்தை மாற்றி மாற்றி போலீசார் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர்… அதிவேகமாக வாகனங்களை செலுத்துவோரை தடுத்து நிறுத்த நடத்தப்படும் இந்த அதிரடி சோதனையில், மதுபோதையில் வாகனத்தை செலுத்துவோரும் வசமாக சிக்கிக் கொள்கின்றனர்.
24 மணி நேரத்தை கடந்து விட்டிருக்கும் இந்த சோதனையில், இதுவரையில் சுமார் 500 வழக்குகள் பதிவாகியிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.