குற்ற, விபத்து வழக்குகளை ஆவணமாக பதிவு செய்வது குறித்து காவல் உயர் அதிகாரிகளுக்கு 5 நாள் பயிற்சி முகாம்.


கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகளை நவீன தொழில் நூட்ப உதவியுடன் ஆவணமாக பதிவு செய்வது எப்படி என சென்னை காவல் உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை வேப்பேரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநில குற்ற ஆவணக்காப்பகம் சார்பில் சி.சி.டி.என்.எஸ். என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி முகாம், வரும் 12ஆம் தேதி வரை நடக்கிறது. முகாமில் சென்னையில் உள்ள அனைத்து காவல்நிலைய ஆண், பெண் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கொலை, கொள்ளை, விபத்து உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் நவீன தொழில்நூட்பங்களை பயன்படுத்தி ஆவணங்களாக பதிவு செய்வது எப்படி என அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.
பயிற்சி முகாமின்போது, காவல் உயர் அதிகாரிகளுக்கான புதிய செல்போன் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய செயலியை பயன்படுத்தும் அதிகாரிகள், வழக்குகளின் தன்மைகளை அறிந்து, அதனை விரைவுபடுத்த முடியும்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.