புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு தொடர்பாக, சென்டாக் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை.


புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறிய அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த, கடந்த 19ந்தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தார்.
கிரண்பேடியின் குற்றச்சாட்டை புதுச்சேரி அரசு மறுத்து வந்தது. இந்நிலையில், சென்டாக் அலுவலகத்தில் மதியம் 12 மணி முதல், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அம்மாநில பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் மத்திய மனித வளத்துறை அதிகாரிகள் மற்றும் சிபிஐ அதிகாரிகள் என 8 பேர் குழு, கலந்தாய்வு ஆவணங்களை சோதனை செய்தது.
சென்டாக் ஒருங்கிணைப்பாளர் கேவிந்தராஜ், துணை ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், ஆகியோரிடமும் 5 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின்பரிந்துரையின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.