பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவின் சொத்துகள் பறிமுதல்.


பீகார் துணைமுதலமைச்சரும், லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வியின் பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லாலு பிரசாத்தின் மகள், மருமகனின் பினாமி சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதியின் ஆடிட்டர் ராகேஷ் அகர்வால், 8 ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடி தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்டார்.
லாலு பிரசாத் குடும்பத்தின் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துகள் தொடர்பாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள 22 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையும் நடத்தியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து மிசா பாரதியும், அவரது கணவர் சைலேஷ் குமாரும் பினாமி பெயரில் சொத்து சேர்த்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இருவரும் விசாரணைக்கு ஆஜராகாததால், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன், ஏன் ஆஜராகவில்லை என விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை கடந்த 6ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், லாலு பிரசாத்தின் மகனும், பீகாரின் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகியோரின் பினாமி சொத்துகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.