தடை செய்யப்பட்ட மாவா, குட்கா, பான்மசாலா பறிமுதல்- 3 பேர் கைது.


வடசென்னைக்குட்பட்ட பகுதிகளில் மம்தா என்ற பெண் தலைமையில் இயங்கி வந்த போதை வஸ்து விற்பனை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மாவா, குட்கா, பான்மசாலா, உள்ளிட்ட பொருட்கள் சென்னை கடைகளில் திருட்டுத் தனமாக விற்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் யானைக்கவுனியில் இவற்றை விற்ற மனோகர் என்ற நபரை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் பேரில் சவுகார்பேட்டை பகுதியில் ரகசியமாக செயல்பட்ட ஒரு கிடங்கில் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாவா, குட்கா, பான்மசாலா, உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். கிடங்கின் உரிமையாளர் மம்தா உதவியாளர் சோனு ஆகியோரை கைது செய்த போலீசார் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.