பாரத் மாதா கீ ஜே என கூறாதவர்கள் தலையை கொய்யப்போவதாக பேச்சு – பாபா ராம்தேவுக்கு பிடியாணை.


“பாரத் மாதா கீ ஜே” என்று கூற மறுப்பவர்களின் தலையை கொய்யப் போவதாக கூறிய வழக்கில் பாபா ராம்தேவுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் ஹரியானா மாநிலம் ரோதக்கில் பேசிய பாபா ராம்தேவ், தாம் சட்டத்தை மதிப்பவராக இல்லாமல் இருந்திருந்தால் பாரத் மாதா கீ ஜே என்றக் கூற மறுக்கும் லட்சக்கணக்கானோரின் தலைகளை கொய்திருப்பேன் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதுதொடர்பாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் சுபாஷ் பத்ரா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நடைபெற்று வரும் ரோதக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையின் போது மீண்டும் ராம்தேவ் ஆஜர் ஆகாததால், அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிப்பதாக நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.