நாளொன்றுக்கு 4 ஜிபி டேட்டா, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிரடி


பிஎஸ்என்எல் நிறுவனம் தினசரி 4 ஜிபி டேட்டா வழங்கும் வகையிலான புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. 
’பிஎஸ்என்எல் சௌகா - 444’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் ரூ.444க்கு பிரீபெய்ட் வாடிக்கையாளர் ரீசார்ஜ் செய்துகொண்டால், தினசரி 4 ஜிபி என 90 நாட்களுக்கு டேட்டா சேவையை பெறலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது தொலைதொடர்பு சேவை வழங்கிவரும் எந்த ஒரு நிறுவனமும் தினசரி 4 ஜிபி டேட்டா என்ற அளவை வழங்கியதில்லை. மேலும், இந்த திட்டத்தின் மூலம் ஒரு ஜிபி டேட்டாவை ஒரு ரூபாய்க்கும் குறைவான விலையில் வாடிக்கையாளர்கள் பெற்று பயனடைவார்கள் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. குறைந்த விலையில் மக்களுக்கு நிறைவான சேவையை வழங்கும் வகையில் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருவதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பின்னர் தொலைதொடர்பு சேவை அளித்து வரும் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்தவகையில், அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த புதிய சலுகையை அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.