மாட்டுக்கறி உண்டதாகக் கூறி இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல். ஒருவர் உயிரிழப்பு.


ஹரியானாவில் ஓடும் ரயிலில் மாட்டுக் கறி சாப்பிட்டதாகக் கூறி மர்மநபர்கள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரம்ஜான் நெருங்குவதை ஒட்டி ஹரியானா மாநிலம் பல்லாப்ஃகாரை (ballabgarh) சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் 4 பேர் டெல்லியில் பொருட்களை வாங்கி விட்டு ரயிலில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது ரயிலில் இருந்த சிலர் 4 இளைஞர்களை மதத்தின் பெயரைக் குறிப்பிட்டு அவதூறாகப் பேசியதுடன், மாட்டுக் கறி சாப்பிட்டதாகக் கூறி தாக்க தொடங்கியுள்ளனர். அப்போது 4 இளைஞர்களுக்கும் கத்திக்குத்து விழுந்ததால், ரயில் பெட்டி ரத்த வெள்ளமாக மாறியது.
அசவதி ரயில் நிலையத்தில் அவர்களை மர்மக் கும்பல் வெளியேற்றியது. தாக்குதலில் ஜுனைத் என்ற இளைஞர் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், மேலும் மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.