பாசிசம் வேகமாக வளர்ந்து வருவதின் குறியீடே யெச்சூரி மீதான தாக்குதல்: ஜவாஹிருல்லா.


மோடி ஆட்சியில் பாசிசம் மட்டும் படுவேகமாக வளர்ந்து வருவதின் குறியீடாக யெச்சூரி மீதான தாக்குதல் அமைந்துள்ளது என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீதான சங்க பரிவார் அமைப்பினர் நடத்திய தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.
டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் பங்குகொள்ள யெச்சூரி முதல் தளத்திற்கு வந்த போது செய்தியாளர்கள் போர்வையில் வந்த சங் பரிவார் அமைப்பினர் சிபிஎம் ஒழிக, இந்து சேனை வெல்க என்று முழக்கமிட்டு அவரைத் தாக்க முற்பட்டுள்ளனர்.
சட்டத்தை தங்கள் கையிலெடுத்துக் கொண்டு சாதாரண மக்களைத் தாக்கி வந்த சங் பரிவார் அமைப்பினர் ஒரு தேசிய கட்சியின் தலைமையகத்திற்குள்ளேயே புகுந்து மாநிலங்களவை உறுப்பினரான அதன் தலைவரைத் தாக்க முற்பட்டிருப்பது தொடர்ந்து நாட்டின் பன்முகத்தன்மையை வலியுறுத்துவோர் மீது ஆளும் பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்பினர் செய்து வரும் வெறுப்பு பிரச்சாரத்தின் வெளிப்பாடாகும்.
நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் வேளையில் பாசிசம் மட்டும் படுவேகமாக வளர்ந்து வருவதின் குறியீடாகவும் யெச்சூரி மீதான தாக்குதல் அமைந்துள்ளது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளாமல் கோழைத்தனமாக நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் யெச்சூரி மீதான தாக்குதல் மட்டுமின்றி ஜனநாயகத்தின் மீதும் அதன் முக்கிய விழுமியமான கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகவும் அமைந்துள்ளது.
பாஜக- ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இந்தத் தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என்று தப்பிக்க இயலாது. இத்தலைவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் வெறுப்பு பிரச்சாரமே இத்தகைய தாக்குதலின் ஊற்றாக அமைந்துள்ளது.
அனைத்து ஜனநாயகக் கட்சிகளும் சக்திகளும் வேற்றுமைகளைத் துறந்து ஒற்றுமையுடன் இத்தகைய பாசிச நடவடிக்கைகளை எதிர்கொண்டு ஜனநாயக ரீதியில் வீழ்த்த உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.