சீதாராம் யெச்சூரி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மோடி தனது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்: திருமாவளவன்


சீதாராம் யெச்சூரி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிரதமர் மோடி தனது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை இந்துத்துவ அமைப்பைச் சார்ந்த இருவர் தாக்க முயற்சி செய்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து குழப்பம் விளைவித்துள்ளனர். இச்செயலை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை சட்டரீதியாகத் தண்டிப்பதோடு அவர்கள் சார்ந்துள்ள அமைப்பையும் தடைசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
சீதாராம் யெச்சூரி இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். அந்த நேரத்தில் அங்கே நுழைந்த இந்துத்துவ அமைப்பைச் சார்ந்த 2 பேர் 'சிபிஐஎம் ஒழிக', 'இந்துசேனா வாழ்க' என்று கூச்சல் எழுப்பியவாறு தோழர் சீதாராம் யெச்சூரியை நோக்கி பாய்ந்துள்ளனர். அங்கிருந்த பத்திரிகையாளர்களும் மற்றவர்களும் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆயினும் தோழர் சீதாராம் யெச்சூரி இந்துத்துவவாதிகளால் கீழே தள்ளப்பட்டிருக்கிறார். அப்போது, காயம் ஏதுமின்றி தப்பித்திருக்கிறார் என்பது ஆறுதல் அளிக்கிறது.
ஒரு கட்சியின் தலைமை அலுவலகத்தில் நுழைந்து அதுவும் பத்திரிகையாளர் கூட்டத்தின்போது வன்முறையில் ஈடுபடுவது இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியையே காட்டுகிறது. இதற்கு, பாஜக அரசின் அணுகுமுறையே காரணம். நாடெங்கும் வகுப்புவாதப் பதற்றத்தை ஏற்படுத்துவது; அதை எதிர்க்கும் ஜனநாயக சக்திகளின் மீது அரசு ஆதரவுடன் தாக்குதல் தொடுப்பது இந்துத்துவவாதிகளின் நடைமுறையாகிவிட்டது. இந்தப் போக்கை விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சீதாராம் யெச்சூரி மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்குப் பிரதமர் மோடி தனது கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும். இத்தகைய ஜனநாயக விரோத சக்திகளின் செயல்பாடுகள் முளையிலேயே கிள்ளியெறியப்படவேண்டும். சீதாராம் யெச்சூரி மீது நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதலைக் கண்டித்து குரல் எழுப்ப அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.