சென்னையில் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு பெரும்பாக்கத்தில் வீடுகள் -உடுமலை ராதாகிருஷ்ணன்.


சென்னையில் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு பெரும்பாக்கத்தில் வீடுகள் ஒதுக்கித்தரப்படும் என்று வீட்டுவசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். துறைமுகம் தொகுதி எம்எல்ஏ சேகர்பாபு விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த, வீட்டுவசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், துறைமுகத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்றார்.
சென்னையில் ஆற்றுப் படுக்கைகளில் வசித்த மக்களுக்கு மாற்று வீடுகள் வழங்க 20 ஆயிரத்து 366 வீடுகள் கட்டப்பட்டு, 4 ஆயிரத்து 613 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். மேலும் 4 ஆயிரத்து 716 வீடுகளை ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். துறைமுகம் தொகுதியில் அரசு எடுத்த கணக்கெடுப்பின்படி 300 குடும்பங்கள் மட்டுமே சாலையோரத்தில் வசிப்பதாகவும், அவர்களுக்கு பெரும்பாக்கத்தில் வீடு வழங்க தயாராக உள்ளதாகவும் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.