கத்தாரில் நிலவும் உணவு தட்டுப்பாட்டால் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினர் தவிப்பு.


கத்தாரில் உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தவித்து வருகின்றனர். தீவிரவாத இயக்கங்களுக்கு உதவுவதாகக் கூறி, சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து உள்ளிட்ட நாடுகள் கத்தார் நாட்டுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டன. போக்குவரத்து சேவைகளையும் துண்டித்தன. இதனால், அந்த நாடுகளிலிருந்து கத்தாருக்கு வந்த உணவுப் பொருள்கள் தடை பட்டன. இதன் காரணமாக, கத்தாரில் உணவுப் பொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழல், அங்கு வசிக்கும் இந்திய தொழிலாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை பெரிதும் பாதித்துள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள இந்திய எலக்ட்ரீசியன் ஒருவர், தோஹா நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி, வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை தற்போது இரு மடங்காகியிருப்பதாக கூறியுள்ளார். எனவே, ஒரு நாளில் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வருவதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.