முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.


முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமலில் உள்ள முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டன்கீழ், மருத்துவ முகாம்கள் நடத்தாமல் நடத்தியது போல் கணக்கு காட்டியது, மருத்துவ சேவைகளில் குறைபாடு, காப்பீடு பெற்றதாக கையெழுத்து பெற்றுவிட்டு சிகிச்சைக்காக பணம் பெற்றது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் மனுச் செய்தார். மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கடந்த 2014ஆம் ஆண்டில் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காததால், அப்போதைய தமிழக தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ரமேஷ் மீண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க தனி குழுக்களும் அதற்கான அலுவலகங்களும் அமைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் 16 மருத்துவமனைகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்,117 மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.