வங்கி கணக்கு தொடங்க மற்றும் வங்கி கணக்குகளை தொடர ஆதார் எண் கட்டாயம்


டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால் செல்லாததாகி விடும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும், பான் எண் பெறவும் வரும் ஜுலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆதார் எண் வைத்திருப்பவர்கள், அந்த எண்ணை பான் கார்டுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே சமயம் ஆதார் எண் இல்லாதவர்களின் பான் கார்டை மத்திய அரசு ரத்து செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வங்கிக் கணக்குகள் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வங்கிக்கணக்குகள் தொடங்கவும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.