போக்குவரத்து விதிகளை மீறினால் 6 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து.


போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்தாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக போக்குவரத்து ஆணையர் மூலம் RTO அலுவலர்களுக்கு உத்தரவு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிக்னல் விளக்குகளை மதிக்காதது, அதிக பாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுவது ஆகிய விதிகளை மதிக்காதவர்கள் மீதும், செல்போன் பேசியபடி வாகனம் ஒட்டுவது, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது ஆகிய விதிமீறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்யுமாறும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களுடன் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேக விபத்துக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.