சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்.


சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 6 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களான பவானி சுப்புராயன், ஜெகதீஷ் சந்திரா, சுவாமிநாதன், அப்துல் குத்தூஸ், தண்டபாணி, ஆதிகேசவலு ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்தது.
இவர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் இவர்களை நீதிபதிகளாக நியமித்து மத்திய சட்ட அமைச்சக இணைச் செயலாளர் ராஜிந்தர் காஷ்யப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விரைவில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் என்ணிக்கை 54-ஆக உயர்கிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.