குறுவை தொகுப்பு சாகுபடிக்கு நடப்பாண்டு ரூபாய் 56 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு.


டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க 56 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் குறுவைத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணை நீர்மட்டம், கர்நாடகாவிடம் இருந்து பெறவேண்டிய காவிரி நீர் குறித்தும், குறுவை சாகுபடி மேற்கொள்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த ஆண்டு கர்நாடகா காவிரி நீரை திறந்துவிடாததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 23 புள்ளி ஆறு எட்டு அடி மட்டுமே இருப்பதாகவும், இதன்மூலம் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள சூழலில் விவசாயிகளின் நலனை காக்க, கடந்த 5 ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் டெல்டா மாவட்ட விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
தற்போதுள்ள நீர் ஆதாரத்தை பயன்படுத்தி, ஒரு லட்சத்தி 60 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே குறுவை நெல் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், நெல் பயிருக்கு மாற்றாக ஒரு லட்சத்தி 32 ஆயிரம் ஏக்கரில் பயறுவகை சாகுபடி மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஏக்கர் ஒன்றில் நடவு எந்திரங்கள் மூலம் நெல் நடவு செய்ய 4 ஆயிரம் ரூபாயும், ஜிங்க் சல்பேட், உயிர் உரங்கள் வாங்க 520 ரூபாயும், நுண்ணூட்ட உரங்களுக்கு 200 ரூபாயும் மானியமாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பயறு வகை விதைகள் வாங்குவதற்கு ஏக்கர் ஒன்றுக்கு 960 ரூபாயும், இலைவழி டி.ஏ.பி. மற்றும் உயிர் உரங்களுக்கு 640 ரூபாயும் மானியமாக வழங்கப்படும் என்று கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பருவமழையைப் பயன்படுத்தி குறுவை சாகுபடியைத் தொடங்க உழவுப் பணிகளுக்காக ஏக்கருக்கு 500 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்ட விவசாயிகள் நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் பி.வி.சி. குழாய்கள் வாங்க 21 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும், பசுந்தாள் உரப்பயிர் சாகுபடியை மேற்கொள்ள ஏக்கருக்கு ஆயிரத்து 200 ரூபாயும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க 56 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் குறுவைத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ள முதலமைச்சர், பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.