பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளும், அஞ்சலகங்களும் ஒரு மாதத்துக்குள் ரிசர்வ் வங்கியில் செலுத்தலாம்.


பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளும், அஞ்சலகங்களும் விதிகளுக்கு உட்பட்டு ஒரு மாதத்துக்குள் ரிசர்வ் வங்கியில் செலுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்களால் செலுத்தப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பெற ரிசர்வ் வங்கி மறுப்பதாக சில வங்கிகள் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்களிடம் பெறப்பட்ட நோட்டுகள் பெருமளவில் குவிந்துள்ள நிலையில் வங்கிப் பரிவர்த்தனைக்கு போதிய பணமில்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள், அஞ்சலகங்கள் ஆகியவை அருகில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைகளில் மாற்றிக்கொள்ளலாம் என நிதியமைச்சக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.