ஐதரபாத்தில் வாடகைத் தாய்மார்கள் 46 பேர் மீட்பு.


ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் செயல்பட்டு வந்த சாய் கிரண் குழந்தை பேறு மருத்துவமனை சட்டவிரோதமாக வாடகைத் தாய்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடம் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் சாய் கிரண் மருத்துவமனையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மருத்துவமனைக்குள் வாடகைத் தாய்மார்கள் 46 பேர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அனைவரும் 9 மாதம் கர்ப்பமாக இருப்பதையும், கடந்த 9 மாதமாக அவர்கள் அங்கேயே அடைத்து வைத்திருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறச் செய்ய சாய் கிரன் மருத்துவமனை அனுமதி பெறவில்லை என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து அந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் மீட்கப்பட்ட வாடகைத் தாய்மார்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், இரண்டரை லட்சம் ரூபாய் முதல் மூன்றரை லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து தங்களை குழந்தை பெற்றுக் கொடுக்க சாய் கிரண் மருத்துவமனை அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளனர். அதே சமயம் குழந்தை இல்லாமல் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற வந்த தம்பதியினரிடம் சாய் கிரண் மருத்துவமனை நிர்வாகம் 40 லட்சம் ரூபாய் வரை வசூலித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.